மத்தியபிரதேசம் செல்லும் வழியில் ராகுல், போக்குவரத்து விதியை மீறினாரா?


மத்தியபிரதேசம் செல்லும் வழியில் ராகுல், போக்குவரத்து விதியை மீறினாரா?
x
தினத்தந்தி 9 Jun 2017 4:30 AM IST (Updated: 9 Jun 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல், போக்குவரத்து விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஜெய்ப்பூர், 

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், மத்திய பிரதேசம் செல்லும் வழியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு தனி விமானத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மத்திய பிரதேச எல்லைக்கு சென்றார்.

இந்த பயணத்தின் இடையே அவர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சில கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்தார். அவர் 3 பேரில் ஒருவராக பயணம் செய்தார்; தலையில் ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை; இதெல்லாம், போக்குவரத்து விதிகளை மீறிய செயல் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி பிரசன்ன காமேஸ்ரா கூறும்போது, ‘‘மத்திய பிரதேச மாநில எல்லை வரையில் ராகுல்காந்தி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 3 பேரில் ஒருவராக அவர் பயணம் செய்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். எனவே அவர் போக்குவரத்து விதிகளை மீறினாரா என்பது குறித்து ஆராயப்படும்’’ என்றார்.
1 More update

Next Story