பாட்னா விமான நிலையத்தில் விமானத்தின் டயர் வெடித்தது


பாட்னா விமான நிலையத்தில் விமானத்தின் டயர் வெடித்தது
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 1 July 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில், டெல்லிக்கு செல்வதற்காக ஒரு தனியார் விமானம் தயார்நிலையில் இருந்தது.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில், டெல்லிக்கு செல்வதற்காக ஒரு தனியார் விமானம் தயார்நிலையில் இருந்தது. அதில், ஜி.எஸ்.டி. வரி அறிமுக விழாவில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக, மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி ராம் கிருபால் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்–மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் உள்பட மொத்தம் 174 பயணிகள் இருந்தனர்.

விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்தது. என்ஜினும் தீப்பிடித்துக்கொண்டது. உடனடியாக, மத்திய மந்திரி உள்பட அனைத்து பயணிகளும் அவசர கால வழி வழியாக, பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

பின்னர், டயரை மாற்றுவதற்காக, என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது, விமானங்கள் கிளம்பவும், தரை இறங்கவும் தடை விதிக்கப்பட்டதால், ராஞ்சியில் இருந்து லாலுபிரசாத் யாதவ் பயணம் செய்த விமானம், தரை இறங்க முடியாமல் தவித்தது.

1 More update

Next Story