பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ‘மேஸ்ட்ரோ’ கார்டுகளுக்கு தடை


பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ‘மேஸ்ட்ரோ’ கார்டுகளுக்கு தடை
x
தினத்தந்தி 3 July 2017 3:30 AM IST (Updated: 3 July 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த

புதுடெல்லி,

 ‘இ.எம்.வி. சிப்’–ஐ மையமாக கொண்ட கார்டுகளாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. எனவே இதன் அடிப்படையிலேயே வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் வழங்கி வருகின்றன.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தற்போது 5.65 கோடி கிரெடிட், டெபிட் கார்டுதாரர்களை கொண்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் பழைய மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளை (ஏ.டி.எம். கார்டு) வைத்துள்ளனர். இந்த கார்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதால் அவற்றுக்கு தடை விதிக்க வங்கி முடிவு செய்துள்ளது.

எனவே மேஸ்ட்ரோ கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் எந்த கிளையிலும் அவற்றை கொடுத்து புதிய ‘இ.எம்.வி. சிப்’–ஐ அடிப்படையாக கொண்ட கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய கார்டுகளை வருகிற 30–ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ள வங்கி, 31–ந்தேதி முதல் மேஸ்ட்ரோ கார்டுகள் செல்லாது எனவும் அறிவித்து உள்ளது.


Next Story