காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தேய்வதை அனுமதிக்க முடியாது - காங்கிரஸ்
தங்கள் கட்சி ஜிஎஸ்டிக்கு எதிராக இல்லை; ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தேய்வதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஸ்ரீநகர்
“ஜிஎஸ்டி எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதில் எங்களுக்கு பிரச்சினையிருக்கிறது என்று கூறிய காங்கிரஸ் அரசு எப்படி மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை தக்க வைக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஜிஎஸ்டி தொடர்பான தனது சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ள சூழலில் காங்கிரஸ்சின் மாநிலத்தின் தலைவர் ஜி ஏ மிர் இவ்வாறு கூறினார்.
காஷ்மீர் மட்டுமே இதுவரை ஜிஎஸ்டியை அமல் செய்யாத மாநிலமாகும்.
மாநிலத்தை ஆளும் பிடிபி-பாஜக கூட்டணி தாங்கள் குழப்பத்தில் இருப்பதோடு, ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்தும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளன என்று கூறினார் மிர்.
ஜிஎஸ்டி குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் பேசி வருவது போல் அரசு காட்டி வருவதன் மூலம் மக்களை முட்டாளாக்கப்பார்க்கிறது என்றார் அவர். எதிர்க்கட்சிகள் அரசிடம் வரைவு திட்டத்தை கோரினர், அவர்களோ கருத்தியல் ரீதியாக ஒரு அறிக்கையை அதுவும் குழப்பங்களோடு கடந்த கூட்டத்தில் கொடுத்தனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Related Tags :
Next Story