ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் பலியாகினர்.
பூஞ்ச்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் பலியாகினர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான இந்த துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பந்திப்போரா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story