கோவிந்த் நல்ல மனிதர்தான்; ஆனால் தேர்தல் சித்தாந்தப் போர் - மீரா
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் தனது போட்டியாளரான கோவிந்த்தை நல்ல மனிதர் ஆனால் போட்டி சித்தாந்த ரீதியிலானது என்றார்.
ராஞ்சி
“ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்தான் ஆனால் எனது போட்டி அவருக்கு எதிரானது அல்ல; அது சித்தாந்த ரீதியிலானது” என்று கூறினார் மீரா குமார்.
ராஞ்சியில் அவர் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினார். “இத்தேர்தல் கட்சி உத்தரவுபடி வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல என்பதால் உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்” என்றார்.
பின்னர் அவர் ஜே எம் எம் கட்சியின் தலைவர் ஷிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோரை தனித்தனியே அவர்களது இல்லங்களில் சந்தித்தார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story