எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு, இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்


எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு, இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
x
தினத்தந்தி 10 July 2017 12:09 PM IST (Updated: 10 July 2017 12:09 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, இரு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.



ஸ்ரீநகர்,

வடக்கு காஷ்மீரின் நவுகாம் செக்டாரியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். அவர்களுடைய முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடிந்தது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இது தொடர்பாக ராணுவ அதிகாரி பேசுகையில், “நவுகாம் செக்டாரில் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான நகர்வு காணப்பட்டது, ராணுவம் தீவிரமாக கண்காணித்தது. பயங்கரவாதிகளின் நகர்வை இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்த நிலையில் துப்பாக்கி சண்டை தொடங்கியது. இதில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என கூறினார். எல்லையில் இருந்து கடைசியாக கிடைக்க பெற்ற தகவலின்படி ராணுவம் தொடர்ந்து எல்லையில் சோதனையில் ஈடுபட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

Next Story