அமர்நாத் தாக்குதலை 2 பாகிஸ்தானியர்கள் உள்பட 4 பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் மத்திய அரசு


அமர்நாத் தாக்குதலை 2 பாகிஸ்தானியர்கள் உள்பட 4 பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் மத்திய அரசு
x
தினத்தந்தி 12 July 2017 9:27 PM IST (Updated: 12 July 2017 9:26 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் பயங்கரவாத தாக்குதலை இரு பாகிஸ்தானியர்கள் உள்பட 4 பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிய பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கங்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்து உள்ளது என கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முகமது இஸ்லாமியிலை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளது.

 பயங்கரவாத தாக்குதலை இரு பாகிஸ்தானியர்கள் உள்பட 4 பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பயங்கரவாதி இஸ்மாயிலுடன் மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதியும், இரு உள்ளூர் பயங்கரவாதிகளும் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 4 பயங்கரவாதிகளையும் வேட்டையாட பாதுகாப்பு படைகள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளது. உளவுத்துறை உள்ளீடுகளையும் தொடர்ச்சியாக பெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

Next Story