காஷ்மீரில் எட்டு சிறுவர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது தடுக்கப்பட்டது
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் எட்டு சிறுவர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்
குப்வாரா மாவட்டத்தின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் எட்டு சிறார்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதை தாங்கள் தடுத்திருப்பதாக கூறினார்.
கடந்த வாரம் சரியான நேரத்தில் தலையிட்டு நான்கு இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது தடுக்கப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் நால்வரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கொடுக்கப்பட்ட தகவலை அடுத்து நாலாபுறமும் தேடுதல் வேட்டை துவங்கியது. பெற்றொரும், உறவினர்களும் கூட இப்பணியில் காவல்துறையினருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். தங்களுக்கு படிப்பு வரவில்லை என்றும் வீட்டிலுள்ள வறுமைச் சூழலும் தங்களை இவ்வாறு தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு தூண்டியதாக அவர்கள் கூறினர்.
இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய காவல்துறையினர் பின்னர் அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story