கர்நாடகா ஐ.டி. ரெய்டு; தாயார் குற்றச்சாட்டுக்கு சித்தராமையாவிடம் மன்னிப்பு கேட்ட டி.கே.சிவக்குமார்


கர்நாடகா ஐ.டி. ரெய்டு; தாயார் குற்றச்சாட்டுக்கு சித்தராமையாவிடம் மன்னிப்பு கேட்ட டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 6 Aug 2017 5:40 AM GMT (Updated: 6 Aug 2017 5:39 AM GMT)

மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பெங்களூர்,


இந்த நிலையில், தனது மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு முதல்–மந்திரி சித்தராமையா தான் காரணம் என்று, டி.கே.சிவக்குமாரின் தாய் கவுரம்மா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது தாய் கூறிய குற்றச்சாட்டுக்காக முதல்–மந்திரி சித்தராமையாவிடம் மன்னிப்பு கேட்டு மந்திரி டி.கே.சிவக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “தனது தாய்க்கு வருமான வரித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியாமல் முதல்–மந்திரி மீது தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவருக்கு போதிய கல்விஅறிவு இல்லை. முதல்–மந்திரி எங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். எனது தாய் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்–மந்திரி சித்தராமையா, மாநில மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,“ என்று கூறியுள்ளார்.



Next Story