இன்று ‘ரக்ஷாபந்தன்’ ஜனாதிபதி வாழ்த்து


இன்று ‘ரக்ஷாபந்தன்’ ஜனாதிபதி வாழ்த்து
x
தினத்தந்தி 6 Aug 2017 9:25 PM GMT (Updated: 6 Aug 2017 9:25 PM GMT)

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘‘ரக்ஷாபந்தன் என்னும் இந்த நல்ல நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன்–தங்கை இடையேயான பாசம் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடும் சிறப்பான விழா இது’’ என தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், ‘‘ரக்ஷாபந்தன், அன்பின் நல்லொழுக்கங்கள், பாசம் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது. இந்த நல்ல நாள் நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரட்டும். மேலும் இந்த சிறப்பான நாள் இந்திய குடிமக்களின் சகோதரத்துவ பலத்தை புதுப்பிக்கும் என நான் நம்புகிறேன்’’ என்று கூறி உள்ளார்.


Next Story