எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற வேண்டும்: சீனா சொல்கிறது


எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற வேண்டும்: சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 7 Aug 2017 2:11 PM GMT (Updated: 7 Aug 2017 2:10 PM GMT)

எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங், 

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைபடும் என்று இந்தியா கருதுகிறது. மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள நிலையே தொடரவேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது.

எங்களது எல்லைக்குள்தான் இந்திய படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. எனவே, இந்தியா தனது ராணுவத்தை உடனே திரும்ப பெறவேண்டும் என்று சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் எழுந்த பிரச்சினையை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் டோக்லாமில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்திய பத்திரிகையாளர்களை சீனா தங்கள் நாட்டுக்கு அழைத்துச்சென்று தனது ராணுவ அணிவகுப்பை நடத்தியது. 
அப்போது சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி லி கூறுகையில், இந்திய ராணுவத்தினர் செய்தது, சீன எல்லையை ஆக்கிரமிப்பு செய்ததுதான். எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியது. 

Next Story