சீனாவில் கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு


சீனாவில் கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு
x
தினத்தந்தி 8 Aug 2017 5:16 PM IST (Updated: 8 Aug 2017 5:16 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் நல்ல ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புஎன கூறி ஏமாற்றி இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.


புதுடெல்லி

வெளிவிவகார துறை அமைச்சகத்தில்  இருந்து பெறப்பட்ட தகவலை மத்திய உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஜி அஹிர் மக்களவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:-

"சீனாவைப் பொறுத்தவரையில், சீனாவில் உள்ள சில இந்தியர்கள் நல்ல ஊதியம் மற்றும் வேலைகள் என்ற வாக்குறுதியால் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது, அவர்கள் பயண முகவர் நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு, கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது."

இவ்வாறு கைவிடப்பட்டவர்கள்  இந்தியாவுக்கு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அஹிர் வழங்கிய  ஆவணங்களில்  "சீனாவில்  மனித கடத்தல் வழக்குகள் 33 பதிவாகியுள்ளது அதே நேரத்தில் , இது கடந்த ஆண்டு 23 ஆக இருந்தது.

நேர்மையற்ற பயண முகவர்கள் இந்திய தொழிலாளர்களை போலி விசா மூலம் ஈராக்கிற்கு கொண்டு சென்று உள்ளனர் என்றும் கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு  சட்டவிரோத முகவர்களால் ஏமாற்றப்படுவதைப் தடுக்க  மாநிலங்களில் 2016 ம் ஆண்டு மே மாதம் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story