சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்


சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
x
தினத்தந்தி 9 Aug 2017 11:49 AM GMT (Updated: 9 Aug 2017 11:48 AM GMT)

புதுடெல்லியில் சைகை மொழியில் உருவான தேசிய கீதத்தினை நடிகர் அமிதாப் பச்சன் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.

கோல்ஹாபூர்,

தேசிய கீதத்தினை மாற்று திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கும் முயற்சிகளை மாற்று திறனாளிகளுக்காக இயங்கி வரும் அமைப்புகள் மேற்கொண்டன.
 
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உருவான சைகை மொழியிலான தேசிய கீதம் அடங்கிய வீடியோ கேசட் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நாளை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு கேசட்டை வெளியிடுகிறார்.  அவருடன் டெல்லியில் இயங்கி வரும் சேத்தனா மாற்று திறனாளி அமைப்பின் குழந்தைகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகளில் இருந்து மாணவர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இதுபற்றி சேத்தனா அமைப்பின் தலைவர் நரேன் பாக்ரே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாற்று திறனாளிகளை சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளில் கொண்டு வருவதற்கும் மற்றும் அவர்களின் சமூக விழிப்புணர்வை பாதுகாக்கும் முயற்சியில் எங்களது அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்தினை அமிதாப் பச்சனுடன் தொடங்குவது என்பது பெரிய விசயம்.  சைகை மொழியிலான இந்த தேசிய கீதம் மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்காக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசைக்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story