இந்திய முஸ்லீம்கள் இடையே அமைதியின்மை உள்ளது: துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி


இந்திய முஸ்லீம்கள் இடையே அமைதியின்மை உள்ளது: துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி
x
தினத்தந்தி 10 Aug 2017 6:34 AM GMT (Updated: 10 Aug 2017 6:39 AM GMT)

இந்திய முஸ்லீம்கள் இடையே அமைதியின்மை உள்ளது என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய முஸ்லீம்கள்  அமைதியின்மை, பாதுகாப்பின்மையை உணர்வதாக துணைஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார். துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு பெறுகிறது. இதையொட்டி, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஹமீது அன்சாரி கூறியதாவது:-

இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள், இந்த கருத்துகள் தெரிவித்து வருவதை கேட்டுள்ளேன். தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவானது பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே, இந்நிலையில்தான் இருக்கிறது. தற்போதைய சூழல், அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது

முத்தலாக் நடைமுறை என்பது சமூகத்தின் தவறான பழக்கமாகும். அது மத அடிப்படையிலான வழக்கம் கிடையாது. இந்த பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட சமூகத்தினர்தான் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னை என்பது அரசியல் ரீதியிலான பிரச்னையாகும். எனவே, அந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும்” என்றார். 

Next Story