சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரணாப் முகர்ஜி

சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி புத்தக வெளியீடு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சகிப்புத்தன்மையற்ற இந்தியாவை புரிந்து கொள்வதில் தான் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி மேலும் கூறும் போது, “ விவாதம் செய்யும் இந்தியாவையும் உடன்பாடு இல்லாத இந்தியாவையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், சகிப்புத்தன்மையற்ற இந்தியாவை புரிந்து கொள்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
Related Tags :
Next Story