இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்


இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:40 PM IST (Updated: 12 Aug 2017 3:40 PM IST)
t-max-icont-min-icon

எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர்.  இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில்இந்தியா அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது.

இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக இந்திய ராணுவம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள், டிரான்ஸ்மிட்டர் கருவுகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படவுள்ள இந்த ரோபோக்கள் ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்குள் ஊடுருவலை தடுப்பதற்கு மேற்கு எல்லையில் சுமார் 2900 கிலோ மீட்டர் தொலைவில் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அரணை உருவாக்குவும் திட்டமிடபட்டு உள்ளது.
1 More update

Next Story