ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கம்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் அண்மையில், அந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், நிதிஷ் குமாருக்கும் சரத் யாதவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். சரத்யாதவுக்கு பதிலாக ஆர்.சி.பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.சி.பி சிங் ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான கடிதத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பிக்கள் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச்சேர்ந்த 10 பேர் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.
Related Tags :
Next Story