டெல்லியில் 22 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

டெல்லியில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,
இந்த நிலையில், மத்திய டெல்லியில் பைரோன் மார்க் பகுதியில் உள்ள தாதாவிடம், சட்ட விரோத ஆயுதங்களை கடத்தி வந்து ஒருவர் ஒப்படைக்க வருவதாக டெல்லி போலீசுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 9 மணிக்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் தோற்றம் அளித்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் தானியங்கி கைத்துப்பாக்கிகள் 22 இருப்பதை கண்டு போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தி வந்து விற்கிற பாச்சுசிங் கும்பலை சேர்ந்த உகாரா சிங் என தெரிய வந்தது.
இந்த தகவல்களை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் மாதுர் வர்மா தெரிவித்தார்.
Related Tags :
Next Story