பதவியேற்பு விழாவிற்குகூட அழைக்கவில்லை நிதிஷை கலாய்க்கும் லாலு பிரசாத் யாதவ்!

புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பாட்னா,
சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் மந்திரிசபையில் சேர்க்கப்படவில்லை. பீகாரில் நிதிஷ் குமார், லாலு மற்றும் காங்கிரஸ் உடனான மகா கூட்டணியை உடைத்துவிட்டு பாரதீய ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை அமைத்து உள்ளார். இதனை நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்தவர்களே எதிர்த்து உள்ளனர். இதனால் உள்கட்சி விரிசலும் உள்ளது.
இப்போது மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதும், ஏமாற்றத்தில் முடிந்தது.
இதுபற்றி பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் சேருவது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் இரு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளது, ஆனால் மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களை கொண்டு உள்ளது. இருப்பினும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் வி என் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது,
ஆனால் இதுதொடர்பாக தேசிய தலைமை விளக்கம் தெரிவித்துவிட்டது, எனவே அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக என்னிடமோ, எங்கள் கட்சியை சேர்ந்த பிறரிடமோ எந்தஒரு கேள்வியும் இல்லை என நழுவிவிட்டார்.
கூட்டணியிலிருந்து விலகி பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ள நிதிஷ் குமாரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் லாலு பிரசாத் விமர்சனம் செய்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தினரை பதவியேற்பு விழாவிற்கு கூட அழைக்கவில்லை. யார் ஒருவர் தன்னுடைய சொந்த மக்களைவிட்டு விலகுகிறாரோ அவரை மற்றவர்கள் ஏற்கவே மாட்டார்கள். இதுதான் நிதிஷ் குமாரின் விதி என கூறிஉள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
Related Tags :
Next Story