மத்திய மந்திரியாக அல்போன்ஸ் கன்னன்தானம் பதவி ஏற்பு: கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து

மத்திய மந்திரியாக அல்போன்ஸ் கன்னன்தானம் பதவி ஏற்பு: கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Sep 2017 10:30 PM GMT (Updated: 3 Sep 2017 10:30 PM GMT)

கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம் நேற்று மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம் நேற்று மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

அல்போன்ஸ் கன்னன்தானத்துக்கு மந்திரி பதவி கிடைத்து இருப்பதன் மூலம் தேசிய பிரச்சினைகளில் மாநிலத்தின் உரிமைகளை எடுத்து செல்ல பெரும் உதவியாக இருக்க நமக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

கன்னன்தானம் எனது நீண்ட கால நண்பர் ஆவார். அவருக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைத்தது ஓணம் பண்டிகைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு இந்த பதவி நமக்கு பலமிக்கதாக இருக்கும். மேலும் மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் மாநில வளர்ச்சிப்பணிகள் எளிதாகும். எனது முழு ஒத்துழைப்பை அவருக்கு அளிப்பேன்’.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story