இளம் வயதினரை தொடர்ந்து மிரட்டும் புளுவேல் : 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்ற மாணவி மீட்பு


இளம் வயதினரை தொடர்ந்து மிரட்டும் புளுவேல் : 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்ற மாணவி மீட்பு
x
தினத்தந்தி 6 Sep 2017 2:34 PM GMT (Updated: 6 Sep 2017 2:34 PM GMT)

ராஜஸ்தானில் புளூவேல் விளையாட்டுக்கு அடிமையான மாணவி மீண்டும் 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோத்பூர்

இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று அழைக்கப்படும்  இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.

விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். மேலும் ஓடும் ரெயிலில் எதிரே உயிரை மாய்த்து கொள்வது, ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதும், வீட்டில் தூக்கில் தொங்குவதும், இது போன்றவை இந்தியாவில் சிறார்கள் இவ்விளையாட்டிற்கு அடிமையாக்கி உயிரை மாய்க்கும் நிலையானது தொடர்கிறது. தற்கொலை கேமாக அறியப்படும் ‘புளூ வேல்’ கேமிற்கு தடை விதித்து உள்ள மத்திய அரசு இணைப்பை நீக்குமாறு கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. 

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 17 வயது மாணவி புளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகி  கைலானா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருக்கும் போது அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு மீண்டும் 2-வது முறையாக அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அந்த மாணவி மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அந்த மாணவி போலீசாரிடம் கூறுகையில்,

 புளூவேல் விளையாட்டில் உத்தரவுப்படி நடக்காவிட்டால் தனது அம்மாவை கொன்றுவிடுவதாக புளூவேல் அட்மின் மிரட்டியதாலேயே தான் இவ்வாறு தற்கொலைக்கு மீண்டும் முயற்சிப்பதாக அந்த மாணவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ‘புளூ வேல்’ விளையாட்டால் இதுவரை  250  பேர்  தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

Next Story