ராணுவத்தை பலப்படுத்தும் பணிகளில் அரசு கவனம் கொண்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்


ராணுவத்தை பலப்படுத்தும் பணிகளில் அரசு கவனம் கொண்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 10 Sep 2017 3:23 PM GMT (Updated: 10 Sep 2017 3:23 PM GMT)

ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் பலப்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகவுள்ளது என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பார்மர் (ராஜஸ்தான்)

இந்திய விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசிய அவர் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் அரசு சிறிதளவு கூட குறைவைக்கவில்லை என்றார் அவர்.

”நான் பிரதமரின் கட்டளையை ஏற்று எல்லைப்புறங்களிலுள்ள வீரர்களை சந்தித்து உரையாடி வருகிறேன். காலையில் கோவாவில் உலகைச் சுற்றும் இந்திய கப்பற்படை பெண்கள் அணியினரின் பயணத்தைத் துவக்கி வைத்தேன். இப்போது உத்தர்லாய் விமானப்படை முகாமில் இருக்கிறேன்” என்றார் அவர்.

முன்னதாக அவர் சிறப்பு விமானம் மூலம் பார்மரிலுள்ள உத்தர்லாய் விமானப்படை முகாமிற்கு சென்றார். அவரை விமானப்படை தலைமைத் தளபதி பி எஸ் தனோவா வரவேற்றார்.

சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது முதல்  பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். 


Next Story