அமெரிக்கா செல்லவுள்ளார் ராகுல்; மாணவர்களுடன் கலந்துரையாடல்


அமெரிக்கா செல்லவுள்ளார் ராகுல்; மாணவர்களுடன் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 10 Sep 2017 4:22 PM GMT (Updated: 10 Sep 2017 4:22 PM GMT)

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளார். அப்போது தனது கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு பேசிய இடத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

புதுடெல்லி

அவர் அமெரிக்காவில் சுமார் இரண்டு வாரங்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாளைய மறுநாள் கலிஃபோர்னியா பலகலைக்கழகத்தில், தனது கொள்ளு தாத்தா நேரு 1949 ஆம் ஆண்டில் பேசிய இடத்தில், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் ராகுல். அது தவிர பல்வேறு தரப்பினருடன் பல கூட்டங்களில் உரையாட உள்ளதாக கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

ராகுல் தனது டிவிட்டர் பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். ராகுலின் பயணம் குறித்து பல டிவிட்டர் பதிவுகளை இட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு ஆலோசகரான சாம் பிட்ரோடா அவர் நியூயார்க்கில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்சின் பெரிய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார். 

அதே சமயம் ராகுல் “செயற்கை அறிவு” குறித்து உரையாடுவார் என்று தவறாக செய்திகள் பரவி வருவதாகவும், அது தவறான செய்தி என்றும் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.


Next Story