உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: விஜயகாந்த்


உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: விஜயகாந்த்
x
தினத்தந்தி 7 Oct 2017 5:50 AM GMT (Updated: 7 Oct 2017 5:50 AM GMT)

உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதையடுத்து, அவரை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

*தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன்
* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது 
* சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவிற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படாததால் கலந்துகொள்ளவில்லை

* அரசியலுக்கு வந்துவிட்ட என்னை பற்றி ரஜினி, கமலிடம் கேளுங்கள்
* சிவாஜியும், கமலும் திரைப்படங்களில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்ததை பார்க்கிறேன்.
*அழைப்பு விடுக்கப்படாததால் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை
*நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story