ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்


ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:46 AM GMT (Updated: 9 Oct 2017 4:46 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பூஞ்ச்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், பூஞ்ச் செக்டாரில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. நேற்று பின்னிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரண்டு மணி நேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 226 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், நடப்பாண்டு தற்போது வரை 503 முறை எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. 

Next Story