ஆலய கருவறையில் நுழைந்து வேத மந்திரங்கள் ஓதிய முதல் தலித் அட்சகர்

கேரளாவில் ஆலய கருவறையில் நுழைந்து வேத மந்திரங்கள் ஓதிய முதல் தலித் அட்சகர்.
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இதன் கீழ் இயங்கும் சபரி மலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த வாரம் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அம்மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் என்பவர் தனது அட்சகர் பணியை தொடங்கினார். தன் குருவிடம் ஆசி பெற்றபின் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜைகள் செய்தார்.
யது கிருஷ்ணன் முதுநிலை சமஸ்கிருதம் படித்தவர். 15 வயது முதல் தன் வீட்டருகே உள்ள கோயில்களில் பூஜை செய்து வந்ததாகவும், தற்போது முறைப்படி சமஸ்கிருதம் கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில், தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழைவதற்கு போராட்டம் நடத்தி 81 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், யது கிருஷ்ணன் முதல் தலித் அர்ச்சகராக மாறியுள்ளது சமுக புரட்சி தான்.
Related Tags :
Next Story