10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 2-வது மாமனே குழந்தைக்கு தந்தை டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்தது


10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 2-வது மாமனே குழந்தைக்கு தந்தை டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்தது
x
தினத்தந்தி 10 Oct 2017 9:51 AM GMT (Updated: 10 Oct 2017 9:51 AM GMT)

சண்டிகாரில் 10 வயது சிறுமி இரு மாமன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார், 2-வது மாமனே குழந்தைக்கு தந்தை என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.


சண்டிகார்,


சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட 10 சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. கருவை கலைப்பது என்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது கிடையாது என சிறுமி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை மேற்கொள்காட்டி கடந்த ஜூலையில் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் சிறுமிக்கு சண்டிகார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடத்தியது.

சிறுமியின் இரு மாமன்களை பிடித்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. முதலாவது மாமனை போலீஸ் கைது செய்தது. ஆனால் அவனுடைய டிஎன்ஏ குழந்தையுடன் ஒத்துப்போகவில்லை. இதனையடுத்து கோர்ட்டு அனுமதியுடன் இரண்டாவது மாமன் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டாவது மாமன் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது என அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்வோம் என போலீஸ் தெரிவித்து உள்ளது.

முதலாவது மாமன் குழந்தைக்கு தந்தை இல்லை என இருந்தாலும், அவனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இருவருன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் என விசாரணையில் தெரியவந்து உள்ளது என விசாரணை அதிகாரி குறிப்பிட்டு உள்ளார். 

Next Story