இந்திய ராணுவ பிரிகேடியர் உயர் அதிகாரி மனைவியுடன் தொடர்பு 5 வருட தண்டனை கிடைக்க வாய்ப்பு?


இந்திய ராணுவ பிரிகேடியர் உயர் அதிகாரி மனைவியுடன் தொடர்பு 5 வருட தண்டனை கிடைக்க வாய்ப்பு?
x
தினத்தந்தி 11 Oct 2017 10:24 AM GMT (Updated: 11 Oct 2017 10:24 AM GMT)

இந்திய ராணுவ பிரிகேடியர் உயர் அதிகாரி மனைவியுடன் தொடர்பு ராணுவ கோர்ட்டில் 5 வருட தண்டனை கிடைக்க வாய்ப்பு?


கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில்   கிழக்கு கட்டளை ராணுவத்தில்  பிரிகேடியராக இருந்த ஒருவருக்கும் அவரது உயர் அதிகாரி லெப்டினன்ட் கேனல் மனைவி ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து பிரிகேடியரின் மனைவி  ராணுவ அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

முதலில் தங்கள் உறவுகளை பிரிகேடியரும் , அவரது உயர் அதிகாரி மனைவியும் மறுத்து உள்ளனர். ஆனால் பிரிகேடியரின் மனைவி இருவரும் பரிமாறிகொண்ட வாட்ஸ் அப் தகவல்களை சமர்பித்தார். இதனை தொடர்ந்து ஜூனியர் அதிகாரி  இராணுவத்தின் பொது நீதிமன்றங்கள் மார்ஷியல் (ஜி.சி.எம்.) முன்  குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்திய இராணுவத்தில் ஒரு சகோதர அதிகாரி   (மற்றொரு அதிகாரி) மனைவியுடன்  உடன் தொடர்பு வைத்திருப்பது ஒரு நீதிமன்றத் துரோக குற்றமாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவங்களுக்கு  ஐந்து வருட கடுமையான சிறைத்தண்டனையை வழங்கபட்டு உள்ளது.

Next Story