தந்தை செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை


தந்தை செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2017 12:15 PM GMT (Updated: 12 Oct 2017 12:15 PM GMT)

கோவாவில் தந்தை செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பனாஜி,

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள சங்கலிம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது மாணவி  தனது தந்தையிடம் தனக்கு செல்போன் வாங்கி கொடுக்குமாறு கூறிவந்தார். ஆனால் தந்தை செல்போன் வாங்கி தர மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்ய முடிவு செய்தார். மாணவியின் தந்தை தனது மூத்த மகளை கல்லூரிக்கு விட்டு வர சென்றார். மாணவியின் தயார் குளிக்க சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மாணவி வீட்டில் உடலில்  மண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் தாய் தீயை அணைக்க முயற்சி செய்தார். அருகில் உள்ளவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story