டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்


டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2017 8:01 AM GMT (Updated: 13 Oct 2017 8:01 AM GMT)

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து கடந்த திங்களன்று உத்தரவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பட்டாசு விற்பனையாளர்கள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அதில்  ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பெரியளவில் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவித்தது. மேலும், வணிகர்களின் மேல் முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் முதல் வாரம் தள்ளி வைத்துள்ளது. காற்றின் மாசுபாடு அளவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்பதை தீபாவளிக்கு பிறகு ஆராய உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. 


Next Story