எல்லையில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல், பள்ளிகள் மூடப்பட்டது

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் ஈடுபட்டதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பூஞ்ச் மாவட்ட துணை கமிஷ்னர் தாரிக் அமகது ஜார்கார் பேசுகையில், “எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதால் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் திக்வார் மற்றும் காதி கார்மாரா பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்றார்.
எல்லையில் நிலையானது கட்டுப்பாட்டுக்கு உள்ளது, மதியத்திற்கு பின்னர் ஷெல் தாக்குதல் நிறுத்தப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.
எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும், அமைதியை சீர்குலைக்கவும் இதுபோன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் முன்னெடுக்கிறது.
Related Tags :
Next Story