கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை: சந்தேகப்படும் 2 கொலையாளிகளின் வரைபடம் வெளியீடு

கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகப்படும் 2 கொலையாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவைச் சேர்ந்த 'கவுரி லங்கேஷ் பத்திரிகை'யின் ஆசிரியரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த சில வாரங்களுக்கு முன் இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம். எம்.கல்புர்கி ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்களைப் போலவே, கவுரி லங்கேஷும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கவுரி லங்கேஷ் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த கொலையில் சந்தேகப்படும் 2 கொலையாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக 200-250 பேரை விசாரித்துள்ளோம் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story