பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்


பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 17 Oct 2017 3:24 AM GMT (Updated: 17 Oct 2017 3:23 AM GMT)

பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய  பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ம்தேதி மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். 8 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட  ஹபீஸ்  சயீத், பாகிஸ்தானில் உள்ளார். இவரை, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தேடப்படும் பயங்கரவாதி என்று அறிவித்துள்ளன. 

இந்த நிலையில், ஹபீஸ் சயீத், அவரது ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் அரசு  கடந்த சில தினங்களுக்கு முன்  அறிவித்தது. இதன் மூலம் ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தும் அந்த அமைப்பு விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.


Next Story