ராஜஸ்தானில் டாக்டர்கள் போராட்டம்: 14 பேர் கைது


ராஜஸ்தானில் டாக்டர்கள் போராட்டம்: 14 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 5:41 PM GMT (Updated: 11 Nov 2017 5:41 PM GMT)

ராஜஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் ரீஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

போபால்,

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அரசு அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இதற்கிடையே, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்து சுமார் 640-க்கு மேற்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்தால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்  பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், இன்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் 14 பேர் ரேஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 டாக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

Next Story