செல்போன் எண்–ஆதார் இணைப்புக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


செல்போன் எண்–ஆதார் இணைப்புக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 13 Nov 2017 11:49 PM GMT (Updated: 13 Nov 2017 11:49 PM GMT)

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6–ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6–ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெசீன் பூனவாலா என்பவர், செல்போன் எண்–ஆதார் இணைப்பு தொடர்பான அறிவிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இதே கோரிக்கையுடன் எண்ணற்ற ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொதுநல மனு என்ற பெயரில் மேலும் ஒரு மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நிலுவையில் உள்ள ஏதேனும் ஒரு மனுவில் மனுதாரர் தன்னையும் இணைத்துக் கொள்ளலாம்’ என்று கூறி, மனுவை முடித்து வைத்தனர்.


Next Story