ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகம்


ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகம்
x
தினத்தந்தி 14 Nov 2017 2:27 AM GMT (Updated: 14 Nov 2017 2:27 AM GMT)

ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 18–ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சூழலில், 200–க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி வீதத்தை 28–ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவை மத்திய அரசு எடுத்ததாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி வரி குறைப்பை தேர்தலோடு ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:- “ ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறையானது மூன்று முதல் நான்கு மாதங்களாக நடைபெறும் பயிற்சி ஆகும். சீரமைப்பு நடைமுறைகள்  தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story