ஆந்திரா கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: படகு நிறுவனத்தின் உரிமையாளர்கள் 7 பேர் கைது


ஆந்திரா கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: படகு நிறுவனத்தின் உரிமையாளர்கள் 7 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2017 3:59 PM GMT (Updated: 16 Nov 2017 3:59 PM GMT)

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான வழக்கில் படகு நிறுவனத்தின் உரிமையாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பெர்ரி கிராமத்தில் கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி  சிலர் கிருஷ்ணா ஆற்றில் உல்லாச படகு பயணம் சென்றனர். 38 பேர் ஒரு தனியார் நிறுவனத்தின் படகை வாடகைக்கு அமர்த்தி கிருஷ்ணா ஆற்றில் பிரகாசம் தடுப்பணைக்கு மேல் புறம் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

கிருஷ்ணா ஆற்றில் பவித்ரா சங்கமம் என்ற இடம் நோக்கி அவர்கள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதைப்பார்த்த அருகில் கரையில் இருந்த மீனவர்கள் சிலர் ஆற்றில் குதித்து 15 பேரை மீட்டனர். இதில் 16 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.  படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிருஷ்ணா நதியில் படகுகளை இயக்கும் நிறுவனத்தின்  7 இயக்குனர்களை விஜயவாடா போலீசார் கைது செய்தனர். 

Next Story