குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்; யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது போலீஸ் என்கவுண்டர்களில் கொல்லப்படுவார்கள் என முதல் மந்திரி யோகி கூறியுள்ளார்.
காசியாபாத்,
உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காசியாபாத் நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.
அவர் பேசும்பொழுது, கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு தொழிற்சாலைகள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் குற்ற செயல் மற்றும் ஒழுங்கற்ற நிலை ஆகியவற்றால் மாநிலத்தில் இருந்து வெளியேறினர்.
எனினும், பாரதீய ஜனதா பதவியேற்ற பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை முன்னேறியுள்ளது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது அவர்கள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story