கேரளாவில் ஒகி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்வு


கேரளாவில் ஒகி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Dec 2017 4:22 AM GMT (Updated: 11 Dec 2017 4:22 AM GMT)

கேரளாவில் ஒகி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் இருந்து மீட்ட 75 மீனவர்களில் 63 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம், 

ஒகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியான நிலையில் நேற்று கொச்சி வியாபின் கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் மிதந்த 2 பேர் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒகி புயலுக்கு கேரளாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

லட்சத்தீவில் மீட்கப்பட்ட 75 மீனவர்களை கடற்படையினர் நேற்று கொச்சிக்கு கொண்டு வந்தனர். அவர்களில் 63 பேர் தமிழக மீனவர்கள், 12 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் 5 பேரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை அறிவித்து உள்ளது.

Next Story