இமாசல பிரதேசத்தில் நில சரிவில் கார் சிக்கி 6 பேர் பலி

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நில சரிவில் கார் ஒன்று சிக்கி குழியில் விழுந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் ராம்பூர் அருகே கார் ஒன்று மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் பெரிய அளவில் நில சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய அந்த கார் அடித்து செல்லப்பட்டு ஆழம் நிறைந்த குழிக்குள் விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் காரில் இருந்த 6 பேர் உயிருடன் புதைந்து விட்டனர். இந்நிலையில், உள்ளூர் மக்கள் அந்த வழியே சென்றபொழுது நில சரிவில் கார் சிக்கி அதில் உடல்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
Related Tags :
Next Story