உங்கள் பலத்தில் வெல்லுங்கள் பா.ஜனதாவிற்கு பாகிஸ்தான் பதில்; அட்வைஸ் வேண்டாம் - மத்திய அரசு


உங்கள் பலத்தில் வெல்லுங்கள் பா.ஜனதாவிற்கு பாகிஸ்தான் பதில்; அட்வைஸ் வேண்டாம் - மத்திய அரசு
x
தினத்தந்தி 11 Dec 2017 10:31 AM GMT (Updated: 11 Dec 2017 10:31 AM GMT)

எங்களை இழுக்காமல் உங்களுடைய பலத்தில் வெல்லுங்கள் என பா.ஜனதாவிற்கு பாகிஸ்தான் பதிலளித்து உள்ளது.புதுடெல்லி,


காங்கிரஸை மையப்படுத்தி குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து குஜராத் தேர்தலை எங்களை இழுப்பதை தவிருங்கள் என பாகிஸ்தான் கூறியது.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, “தேர்தல் வாதத்திற்கு இந்தியா பாகிஸ்தானை இழுப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும், சதிதிட்டம் என போலியாக குற்றம்சாட்டுவதை தவிர்த்து உங்களுடைய சொந்த பலத்தினால் வெற்றி பெறுங்கள், உங்களுடைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை, பொறுப்பற்றவை,”என பதிலளித்தது. குஜராத் தேர்தலில் அரசியல் கட்சிகள் இடையிலான வாதப்பொருளாக இருந்த பாகிஸ்தான் தலையீடு குற்றச்சாட்டு இப்போது இருநாடுகள் இடையிலான வாதமாக மாறிஉள்ளது.

குஜராத் தேர்தலில் எங்களை இழுக்காதீர்கள் என பாகிஸ்தான் கூறியதற்கு பதிலளித்து உள்ள மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்,  “பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதாவால் மக்கள் ஆதரவுடன் தேர்தல்களில் வெற்றிபெற முடியும். எங்களுக்கு அட்வைஸ் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்தஒரு தலையிட்டையும் நாங்கள் வெறுக்கிறோம், எங்களுடைய ஜனநாயகத்தில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என பேசிஉள்ளார். 

Next Story