கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்


கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
x
தினத்தந்தி 12 Dec 2017 1:54 PM IST (Updated: 12 Dec 2017 1:54 PM IST)
t-max-icont-min-icon

கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஒரே சாலையான ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. 

முகல் சாலையும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.  கன மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலையில் பனிக்கட்டிகள் மலை போல் குவிந்துள்ளது. இதனையடுத்து பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
1 More update

Next Story