கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு இன்று 62-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து


கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு இன்று 62-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 13 Dec 2017 12:41 PM IST (Updated: 13 Dec 2017 12:41 PM IST)
t-max-icont-min-icon

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு இன்று தனது 62-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பானஜி,

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மனோகர் பாரிக்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “  பிறந்த தினமான இன்று கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், மேனகா காந்தி, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மனோகர் பாரிக்கருக்கு வாழ்த்துக்களை  தெரிவித்துள்னர். 

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதும், கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார். 
1 More update

Next Story