புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு கன்னட அமைப்பினர் போராட்டம்


புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு கன்னட அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 10:49 AM GMT (Updated: 15 Dec 2017 10:49 AM GMT)

நடிகை சன்னி லியோன் பெங்களூருவில் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூர்

பெங்களூரில் புத்தாண்டு தினத்தன்று   மான்யதா டெக் பார்க்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று ஆபாச  நடனம் ஆட உள்ளார் என விளம்பரம் செய்யப்பட்டு  வந்தது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன்னி லியோனின் உருவ புகைப்படங்களை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Next Story