சோனியா தலைவர் பதவியில் இருந்தே ஓய்வு, அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை -காங்கிரஸ்


சோனியா தலைவர் பதவியில் இருந்தே ஓய்வு, அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை -காங்கிரஸ்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:46 AM GMT (Updated: 15 Dec 2017 11:46 AM GMT)

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். ஆனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என காங்கிரஸ் கூறி உள்ளது

புதுடெல்லி

நாளை காங். தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ள நிலையில்  அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என சோனியா காந்தி கருத்து தெரிவித்து உள்ளார்.

1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு  காங்கிரஸ் பல பிரிவுகளாக பிரிந்து பலவீனமடைந்தது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் சோனியாகாந்தி  காங்கிரஸ் தலைவராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.  அவர்களின் வேண்டுதலின் பேரில்  1997ல் அரசியலில் ஈடுபட போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக தன்னை சோனியாகாந்தி இணைத்து கொண்டார். பின்னர்  1998 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று கொண்டார்  

காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். 

 2004 தேர்தலில்  ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் மோக வெர்றி பெற்று ஆட்சி அமைத்தது. சோனியா காந்தி   மன்மோகன் சிங்கை பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைத்தார்

2009 பொதுத்தேர்தல்களில்  சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று  மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமரானார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியாகாந்தி  2 முறை காங்கிரசை ஆட்சியில் அமரவைத்தார்.

 இதனிடையே கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தீவிர அரசியலில் இருந்தும் சற்றே விலகி இருந்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சோனிய காந்தி, தனது நீண்ட கால மவுனத்தை மெதுவாக கலைத்தார். என்னுடைய பங்கு இனி ஓய்வு பெறுவதுதான் என்றார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 

நாளை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று கொள்கிறார். அதன் பிறகு  சோனியா காந்தி இருந்து ஓய்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.

இது குறித்து  காங்கிரஸ்  செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அதில், 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். ஆனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவருடைய ஆசி, அறிவு மற்றும் கட்சியில் அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அவர் கட்சியிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருப்பார், என சுர்ஜிவாலா கூறியுள்ளார்.




Next Story