விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை


விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2017 11:45 PM GMT (Updated: 16 Dec 2017 9:28 PM GMT)

டெல்லியில் நபார்டு வங்கி சார்பில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுடெல்லி,

விவசாயம் மற்றும் கிராம பொருளாதாரத்தில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இந்திய பொருளாதாரம் விவசாயிகளை சார்ந்து உள்ளது. வளர்ந்த நாடுகள் மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. வறட்சியால் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் விவசாயிகளை காப்பீடு பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story