ஒகி புயல் பாதிப்பு லட்சத்தீவில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்


ஒகி புயல் பாதிப்பு லட்சத்தீவில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2017 7:36 AM GMT (Updated: 19 Dec 2017 7:36 AM GMT)

ஒகி புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சூழ்நிலையை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடனான கூட்டம் லட்சத்தீவில் இன்று நடந்தது.

கொச்சி,

தமிழ்நாடு, கேரளாமற்றும்லட்சத்தீவுயூனியன்பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த நவம்பர் இறுதியில் ஒகி புயல் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதனால் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளாமற்றும்லட்சத்தீவுயூனியன்பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஒகிபுயலால்பாதிக்கப்பட்டபகுதிகளுக்குஇன்றுபிரதமர்நரேந்திரமோடிபார்வையிடவருகிறார் என தகவல்கள் வெளியாகின.

அதன்படி கர்நாடகாவில் உள்ள மங்களூருவுக்கு வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை விமானம் ஒன்றில் லட்சத்தீவுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.

லட்சத்தீவுக்கு இன்று காலை வந்திறங்கிய பிரதமருக்கு லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் உள்படி உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லட்சத்தீவின் கவரட்டியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர் மட்ட அளவிலான கூட்டத்தில், ஒகி புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சூழ்நிலை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story