பிரதமர் மோடிக்கு 3–வது இடம் சர்வதேச கணக்கெடுப்பில் அறிவிப்பு


பிரதமர் மோடிக்கு 3–வது இடம் சர்வதேச கணக்கெடுப்பில் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 11:30 PM GMT (Updated: 11 Jan 2018 8:28 PM GMT)

உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு 3–வது இடம் சர்வதேச கணக்கெடுப்பில் அறிவிப்பு.

புதுடெல்லி,

கல்லப் இன்டர்நே‌ஷனல் என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த உலக தலைவர்கள் பற்றி 50 நாடுகளை சேர்ந்த மக்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகின் சிறந்த 3 தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடம் கிடைத்தது. முதல் இடத்தில் 21 புள்ளிகளுடன் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் உள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனியின் தலைமை ஆலோசகர் ஏஞ்சலா மெர்கெல் 2–வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3–வது இடத்திலும் உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் இந்த மாதம் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த கணக்கெடுப்பு முடிவு வெளியாகி உள்ளது. இது மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மோடிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது.


Next Story