இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்


இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:38 AM GMT (Updated: 12 Jan 2018 4:39 AM GMT)

இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. #Cartosat2 | #ISRO | #PSLVC40

சென்னை,

இந்தியாவின் 100-வது செயற்கை கோளான கார்ட்டோ சாட்-2 உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி -40 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. காலை 9.29 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.

ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட் -2 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 710 -கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள்,  பூமியின் மேற்பரப்பை துல்லியமாக  படம் எடுக்கும் திறன் கொண்டது.  #Cartosat2 | #ISRO |  #PSLVC40 

Next Story